24 668aae2e0fddd 8
இலங்கைசெய்திகள்

வைத்தியர் அர்ச்சுனா மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

Share

வைத்தியர் அர்ச்சுனா மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் (jaffna) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில், சுகாதார பணிப்பாளரிடம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் சிலர் புதிதாக பதவியேற்ற பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார் நடவடிக்கை எடுத்தீர்களா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், இதற்கு பதில் அளித்த பணிப்பாளர் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை இடை நிறுத்தும் ஏற்பாடுகள் ஏதேனும் இடம்பெற்றதா எனக் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் கூறாமல் மத்தியில் இருந்து விசாரணை குழு குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...