24 667f7cfe0ff26
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவை நம்பி ஏமாற்றமடைந்த சம்பந்தன்!

Share

ரணில் விக்ரமசிங்கவை நம்பி ஏமாற்றமடைந்த சம்பந்தன்!

ரணில் விக்ரமசிங்கவை நம்பி இரண்டு வருடத்துக்கு குறையாமல், வழிகாட்டல் குழுவில் அமர்ந்து, புது அரசியலமைப்பை எழுதி முடிக்க பாடுபட்டவர் இரா. சம்பந்தன் ஐயா எனவும், அதை நம்பி தமிழரின் தீர்வு விடயம் தொடர்பில் கெடு கூறி அதற்காகவும் கடுமையாக விமர்சிக்க பட்டவர் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மறைந்த தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பில் மனோ கணேசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தான் முதலில் ஒரு இலங்கையன் எனவும், பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர் இரா. சம்பந்தன்.

சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற “பல்லின-பன்மொழி-பன்மத” இலங்கையன் என கூறியவர்.

பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர்.

அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ். மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.

எல்லாவற்றையும் மீறி நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவை நம்பி இரண்டு வருடத்துக்கு குறையாமல், வழிகாட்டல் குழுவில் அமர்ந்து, புது அரசியலமைப்பை எழுதி முடிக்க பாடுபட்டவர்.

அதை நம்பி “தீபாவளிக்கு தீர்வு”, “பொங்கலுக்கு தீர்வு” என்று கெடு கூறி அதற்காகவும் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.

அறிவு, ஆன்மா, உடல் என்ற மனித கூறுகளில், உடலால் மட்டுமே பலவீனமாக இறுதி காலத்தில் இருந்தார். அறிவும், ஆன்மாவும் பலம் இழக்கவே இல்லை. நான் அவரது கட்சி அங்கத்தவன் இல்லை.

ஆனால், இந்த “சிங்க கொடி முதல் வழி காட்டல் குழு” சம்பவங்கள் வரை எல்லாவற்றையும் அவருக்கு மிக பக்கத்தில் இருந்து நேரடியாக பார்த்தவன், நான்.

அவரை மதித்து, அவரை பயன் படுத்தி, பிரிபடாத இலங்கைக்குள் தீர்வு தேட தவறிய அனைத்து சிங்கள பெளத்த தேசிய கட்சிகளின் தலைவர்களும் இப்போது வரிசையாக வந்து, இரா. சம்பந்தனுடன் எனக்கு முப்பது வருட பழக்கம், நாற்பது வருட பழக்கம், ஐம்பது வருட பழக்கம் என்று அளப்பார்கள்.

அதையும் உங்கள் சாகாத ஆன்மா எங்கோ இருந்த படி கேட்க போகிறது, சம்பந்தன் ஐயா. பிரிவோம்..! சந்திப்போம்..!” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...