24 6678f3aa0f314
இலங்கைசெய்திகள்

சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Share

சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இந்த வாரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Mathumabandara) தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு இந்த வாரத்தில் கூடி சரத் போன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் பதவி நிலை எதுவாக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டியது அவசியமானது என கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை | Sjb Take Action Against Army Field Marshal Fonseka

சரத் போன்சேகா ஒழுக்கமான முறையில் செயல்படுவதாக தென்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே சரத் பொன்சேகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறு எனினும் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ராஜித, அதிபர் ரணிலை புகழ்ந்தாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, சரத் பொன்சேகா போன்று விமர்சனம் செய்யவில்லை என ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டி உள்ளார்.

 

Share
தொடர்புடையது
QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...