30 2
இலங்கைசெய்திகள்

தனியார் வாகன இறக்குமதி குறித்து இராஜாங்க அமைச்சர் தகவல்

Share

தனியார் வாகன இறக்குமதி குறித்து இராஜாங்க அமைச்சர் தகவல்

இலங்கையின் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 ஆம் ஆண்டிற்குள் நீக்குவதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் (Anuradhapura) நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், ”2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், 10 சதவீத பொருளாதாரம் சுருங்கியிருந்த நிலையில், தற்போது 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் உள்ளது.

அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதினையும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

நாட்டில் சுதந்திர சந்தைக்குத் தேவையான சூழலை உருவாக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது தவணை சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டது.

இலங்கையை உடைக்க முடியாத பொருளாதாரமாக மாற்றி, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்திற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...