27 2
இந்தியாஉலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர்

Share

செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர்

இந்திய இயற்பியலாளர் தேவேந்திர லாலின் நினைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்திற்கு ‘லால்’ என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இயற்பியலாளர் தேவேந்திர லால் (1929-2012) ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அகமதாபாத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தை நிறுவிய முன்னோடிகளில் தேவேந்திர லால் என்பவரும் ஒருவர்.

செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் 69 கிமீ விட்டம் கொண்ட ஒரு பள்ளத்திற்கே இந்த பெயர் பெயரிடப்பட்டது.

மேலும், இரண்டு பள்ளங்கள், இரண்டு வட இந்திய நகரங்கள், ‘முஸ்ரான்’ மற்றும் ‘ஹில்சா’ என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ரோபோ விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இந்த விண்கலம் ‘மங்கள்யான்‘ என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வகையில் ‘மங்கள்யான் 2’வை வடிவமைத்து வருகின்றனர். மங்கள்யான் 2 செவ்வாயில் தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...