19 2
இலங்கைசெய்திகள்

ஆசியாவின் சமூக சேவைத் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

Share

ஆசியாவின் சமூக சேவைத் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை

ஆசிய பிராந்திய சமூக சேவை துறை தரவரிசையில் இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டளவில் அடைந்திருந்த கரும்புள்ளியை அகற்றி 2024ஆம் ஆண்டில் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல் சுட்டிக்கு அமைய இலங்கை இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதற்கமைய கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் DOING OKEY குழுவில் இலங்கை இணைந்துள்ளது.

2022ஆம் ஆண்டு சுட்டெண் படி, இலங்கை பங்களாதேசுடன் தரவரிசையில் NOT DOING ENOUGH பிரிவில் இருந்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்துள்ளது என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன (Sanjeewa Wimalagunaratne) தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவிடப்படும் இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர், சீனா, தைபே ஆகிய நாடுகளின் வகுதியான DOING WELL குழுவில் 2026ஆம் ஆண்டில் இணைவதற்கான மறுசீரமைப்புகள் இடம்பெறுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...