மதுரையைச் சேர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர் ஒருநாள் கூத்து, டிக் டிக், திமிருபிடிச்சவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தார்.
இவர் மதுவரைச் சேர்ந்தவர் என்றாலும் கல்வி நடவடிக்கையை டுபாயிலேயே தொடர்ந்தார். நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை திரும்பியிருந்தார். அவர் வசம் இப்போது மூன்று திரைப்படங்கள் கைவசம் உள்ளன.
நிவேதா டுபாயில் இருக்கும்போது, கார்ப் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கார்ப் பயிற்சியில் ஈடுபடுவார். கோவையில் அடுத்த வாரம் கார்ப்பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் நிவேதாவும் பங்கேற்கவுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரனும் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment