24 665991835a318
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

Share

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை மே மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், கடந்த 27ஆம் திகதியிலிருந்து மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க, மின்சார கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்படி கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...