நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளிவந்தன. சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் பிரிகிறார்கள் என்று ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், இருவரும் இதுதொடர்பாக மறுப்பு தெரிவிக்காமலே இருந்துவந்தனர்.
இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாகசைதன்யா இன்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம்.
பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment