New Project 5
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது விசேட சுற்றுநிரூபம்!

Share

ஊரடங்குச் சட்ட தளர்வையடுத்து அரச பணியாளர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செய்லாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச அதிபர்மார், பிரதேச செயலாளர்கள், அரச கூட்டுத்தாபன மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு,

1. அத்தியாவசிய சேவைகளுக்கு தேவைப்பட்டோர் மாத்திரமே கடமைகளுக்கு அழைக்கப்பட வேண்டும். அதனை, அந்தந்த  அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் தீர்மானிக்கலாம்.

2. உத்தியோகபூர்வ வாகனம் உடையவர்கள், போக்குவரத்து கொடுப்பனவு பெறுவோர் அல்லது அலுவலக வாகன வசதிகளைப் பெறும் அரச உத்தியோகத்தர்கள் வழமைபோல் கடமைக்கு வரலாம்.

3. இவ்வாறு அழைக்கப்படும் பணியாளர்கள் தவிர ஏனையோர் ஒன்லைன் ஊடாக சேவையாற்றலாம்.

4. கர்ப்பிணி தாய்மார்,  பாலூட்டும் தாய்மார் விசேட தேவையுடைய பணியாளர்கள் இப்போதைக்கு அழைக்கப்பட கூடாது. அவ்வாறானவர்கள் கட்டாயம் அழைக்கப்பட வேண்டுமாயின் அவர்கள் வந்து செல்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

5. அரச பணியாளர்கள் சேவை சமுகமளிப்பின்போது உள்வருகை, வெளிச்செல்லல் பதிவுகள் மட்டும் போதுமானவை.

6. அனைத்து சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படல் வேண்டும்.

7.  உள்ளக கருத்தரங்குகள், கூட்டங்கள் இயன்றளவு இணையத்தினூடாக இடம்பெற வேண்டும்.

8.  அரச பணியாளர் ஒருவர் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டால் அவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறாத பட்சத்தில்  அவருக்கான ஊதியத்தில் குறைப்புச் செய்யப்படக் கூடாது.

9.பதவி உயர்வு, நிரந்தர நியமனம், ஓய்வு பெறுகை தொடர்பிலான சுற்றறிக்கை எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...