பொழுதுபோக்கு
ஓடிடி தளத்தில் வெளிவரும் சூர்யா படம்
நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படத்தை அடுத்து ஜோதிகாவின் 50 வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் 14 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உடன் பிறப்பே திரைப்படத்தில் சசிகுமார், ஜோதிகா, சூரி, சமுத்திரகனி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கத்துக்குட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
You must be logged in to post a comment Login