24 662da6889bf3b
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்

Share

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

17 இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதன் மூலம் அவர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் இடர் மதிப்பீட்டு பிரிவிற்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் குறித்து மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 13 சிறுவர்களின் தகவல்கள் குடிவரவு திணைக்கள பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழந்தைகளில் 08 பேர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீதமுள்ள 05 பேர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்டு முதலில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர், மலேசிய குழந்தைகளாக தேவையான ஆவணங்களைத் தயாரித்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் கடந்த 25 ஆம் திகதி 14 வயது சிறுவன் ஒருவரை தந்தையுடன் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லவிருந்த ஒருவரை கோலாலம்பூர் விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி நேற்று காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியாவின் ஏ.கே. – 047 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அவர்கள், விமான நிலையத்தில் குடிவரவு திணைக்களத்தின் புலனாய்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...