24 662d066094ea3
இலங்கைசெய்திகள்

இலங்கையுடன் ஈரான் தொடர்ந்தும் நட்புறவில் இருக்க வேண்டும்: சஜித் தரப்பு

Share

இலங்கையுடன் ஈரான் தொடர்ந்தும் நட்புறவில் இருக்க வேண்டும்: சஜித் தரப்பு

ஈரான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு மக்கள் இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவில் இருப்பதையே தாம் விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்(SJP) தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்காக( Ebrahim Raisi) நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்தால் “ரணில் – சஜித் அரசியல் டீலுக்குத் தயார்” என்று அவதூறு ஒன்றை உருவாக்கி பரப்பவும் இந்த ஊடகவியலாளர்கள் தயாராக இருந்தமை தெரிய வந்தமை காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் அதனை புறக்கணிக்கும் தீர்மானத்துக்கு வருவதற்கான மற்றுமொரு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில், ஈரான் ஜனாதிபதியும், ஈரான் மக்களும் இலங்கையுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளும் நட்புறவை தாம் எப்போதும் வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தின் போது ஈரான் ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஈரான் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளது.

அவ்வாறு இருக்கும் போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் ஊடக நடவடிக்கைகள் மூலம் ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்க முயற்சிப்பது அடிப்படையற்ற விடயமாகும்.

குறித்த விடயம் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...