24 6626374666e33
சினிமாபொழுதுபோக்கு

திரிஷா மட்டுமல்ல அந்த 22 வயது நடிகையும் இதற்காக தான்.. ரஜினிகாந்த் பாணியில் விஜய்

Share

திரிஷா மட்டுமல்ல அந்த 22 வயது நடிகையும் இதற்காக தான்.. ரஜினிகாந்த் பாணியில் விஜய்

பெரிதும் எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் Goat. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறார்கள்.

சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்திருந்தது. சில விமர்சனங்கள் பாடல் மீது இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

Goat படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும் நடிகை திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், திரிஷாவை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையான ஸ்ரீலீலாவும் இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறதாம்.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஸ்ரீலீலா நடனத்தில் மிரட்டுவார் என்பதை நாம் அறிவோம். கடைசியாக மகேஷ் பாபுவின் படத்தில் குர்ச்சி மடத்தபெட்டி பாடலுக்கு இவர் ஆடிய நடனம் வேற லெவலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா நடனமாடி இருந்தார். இது அப்படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக அமைந்தது.

அதே பாணியை தான் விஜய் தற்போது Goat படத்தில் கையாளுகிறாரா? அதற்காக தான் திரிஷா போன்ற முன்னணி நடிகையும், இளம் சென்சேஷனல் ஸ்ரீலிவையும் இப்படத்தில் நடனமாட வைக்கிறார்களா என கேள்வி எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...