24 66207ee1c60f8
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள பல கோடி ரூபா!

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள பல கோடி ரூபா!

தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அளவு வரலாறு காணாத மாற்றத்தை பெற்றுள்ளதுடன் அதனூடாக கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யால தேசிய பூங்காவை(Yala National Park) பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 100,000 க்கும் அதிகமானவர்கள் வந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரிய, கவுடுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.

மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக் கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...

Deshabandhu Tennakoon
இலங்கை

அரகலய வழக்கு தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, அனுருத்த பண்டார என்ற இளம் சமூக...

mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...