நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகிறது.
அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment