இலங்கை
கைக்குண்டு மீட்பு – முன்னாள் போராளி கைது
நாராஹேன்பிட்டி தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை உப்புவெளிப் பகுதியைச் சேர்ந்த (வயது–40) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளது.
நாராஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் மலசலகூடத்திலிருந்து கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.
அதனையடுத்து திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தாார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கி நன்கொடை பெறும் நோக்கிலேயே வைத்ததாக இளைஞர் வாக்குமூலம் வழங்கினார்.
அத்துடன் அமைச்சர் ஒருவரின் வீட்டில் கட்டட நிர்மாணப் பணியின் போது குறித்த கைக்குண்டை பெற்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு இணைந்து தேடுதல் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் நேற்று உப்புவெளி பகுதிக்குச் சென்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் அதிகாரிகள் முன்னாள் போராளி ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைக்குண்டை வழங்கியவர் அதை வெடிக்க வைப்பது குறித்து 6 நாட்கள் பயிற்சி வழங்கினார் எனவும் வைத்தியசாலையில் குண்டை வைத்த சந்தேகநபர் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
அதன்படி முன்னாள் போராளி குறித்த கைக்குண்டை வழங்கியுள்ளாரா அல்லது அமைச்சரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login