24 661372f151608
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு சவாலாக அமையப் போகும் மைத்திரி

Share

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு சவாலாக அமையப் போகும் மைத்திரி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஏனைய வேட்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) சவாலாக அமையப் போகின்றார் என்று மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த நாட்டில் இருக்கும் பழமை வாய்ந்த கட்சி. நாடு அரசியல் ரீதியில் தற்போது நெருக்கடி நிலையில் இருப்பதால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையும்.

அதனால் பிரதான கட்சிகள் தற்போது கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க பல தரப்பினர் முன்வந்திருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் எதிர்வரும் மே முதலாம் திகதி இடம்பெறும் கட்சியின் மேதின கூட்டத்தின்போது கட்சியின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பாேம்.

ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மிகவும் சவாலாக இருந்து வருவதே அதற்கு காரணமாகும்.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி, கட்சியை பிளவு படுத்துவதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எந்த சதித்திட்டங்களை மேற்கொண்டாலும் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

எனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம். சில சந்தர்ப்பங்களில் கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாகவும் ஆலாேசித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...