24 661091661a81a
இலங்கைசெய்திகள்

புலத்சிங்கள பகுதியில் நேற்றிரவு அமைதியின்மை

Share

களுத்துறை – புலத்சிங்கள – ஹல்வத்துர (Bulathsinhala) பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலத்சிங்கள, ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதி விபத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து குழப்பநிலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போது மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....