சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பார்க்கில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியதைத் தொடர்ந்து அந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment