Screenshot 2024 03 31 094908 660ab50cd9916
சினிமாசெய்திகள்

மலையாளத்தில் சக்கைபோடு போட்ட’பிரேமலு’படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Share

மலையாளத்தில் சக்கைபோடு போட்ட’பிரேமலு’படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என வேற்று மொழிகளில் வெளியான திரைப்படங்கள் ரவுண்டு கட்டி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில், மலையாளத்தில் வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து, உருவான கலக்கல் கலந்த காதல் படம் தான் பிரேமலு.

இந்த படத்தில் நஸ்லன், மமிதா பைஜு நடித்துள்ளதோடு, இந்த படத்தை தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏரி இயக்கியுள்ளார்.

பிரேமலு திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக கடந்த ஒன்பதாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நெருக்கமான கதைகளத்தில் உருவான இந்த படம், 100 கோடிக்கும் அதிகமாக வசூலில் வேட்டையாடி உள்ளது.

இந்த படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழிலும் கடந்த 15ம் திகதி வெளியானது.

இந்த நிலையில், மலையாளத்தில் பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற ‘பிரேமலு’ திரைப்படம் தமிழிலும் வெளியானதை தொடர்ந்து, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளாஸ்ட் ஹாட்ஸ்டாரில் பிரேமலு திரைப்படம் வெளியாக உள்ளதாம். இந்த தகவல் ஓடிடி இல் படம் பார்க்க ஆர்வம் காட்டும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...