23 64411fe5e2875
சினிமாபொழுதுபோக்கு

உடல் எடையை சுத்தமாக குறைத்தது ஏன், அப்படி ஒரு நோய் பிரச்சனையா?- லாஸ்லியா கூறிய தகவல்

Share

உடல் எடையை சுத்தமாக குறைத்தது ஏன், அப்படி ஒரு நோய் பிரச்சனையா?- லாஸ்லியா கூறிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நடிகர்களை மட்டுமே தேர்வு செய்யாமல் பல துறையில் சாதிக்கும் கலைஞர்களை போட்டியாளர்களாக போடுவார்கள்.

அப்படி தொடர்ந்து செய்தி வாசிப்பாளர்களையும் போட்டியாளர்களாக இறக்கினார்கள். அப்படி இலங்கையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த லாஸ்லியாவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பப்ளியாக இருந்தவர் கடுமையான சொர்க் அவுட்டுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பதில் படு பிஸியாகிவிட்டார்.

 

நோய் காரணம்

அதிரடியாக உடல் எடையை குறைத்தது குறித்து நடிகை லாஸ்லியா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், நான் நிறைய உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அதன் காரணமாகவே நான் உடல் எடையை குறைத்தேன்.

 

எனக்கு PCOD பிரச்சனை இருந்தது, இந்த பிரச்சனை தன்னை போல இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிகம் அவதிப்படுவோர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நானும் இந்த பிரச்சனையால் தான் ஜிம் சென்றேன்.

 

அதிக உடல் எடை இருந்தாலும் இந்த பிரச்சனை வரும், ஜிம் போக முடியவில்லை என்றால் தினமும் காலை 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...