24 660a608bbea47
சினிமாபொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்

Share

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்

சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே 23 ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இந்த இரு திரைப்படங்களும் இதுவரை நாம் பார்த்த சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் பட வில்லன்

இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தான் கமிட்டாகி இருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்திலும் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழில் வெளிவந்த பில்லா 2 மற்றும் அஞ்சான் போன்ற திரைப்படங்களிலும் வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...