24 6604d82840d6b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களால் அதிர்ச்சியடையும் சுற்றுலா பயணிகள்

Share

இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களால் அதிர்ச்சியடையும் சுற்றுலா பயணிகள்

தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அமைதியற்ற சூழல்நிலை ஏற்படுமானால் அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதன்படி, பெந்தர, அஹூங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்ற போது, இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியம் எனவும் இதனால் சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...