24 66025f67ce5b1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் அச்சுறுத்தலாக மாறும் கர்ப்பிணி பெண் தலைமையிலான கும்பல்

Share

கொழும்பில் அச்சுறுத்தலாக மாறும் கர்ப்பிணி பெண் தலைமையிலான கும்பல்

கொழும்பில் இருந்து செல்லும் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடக்கிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் மற்றும் 2 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20, 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து தம்புத்தேகம ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது நகையை யாரோ பேருந்திற்குள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்ததார்.

இதையடுத்து பேருந்தை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த பெண்கள் உள்ளிட்ட பெண்கள் கும்பல், நாடளாவிய ரீதியில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...