24 65fcd1513fe17
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம்

Share

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம் தொடர்பிலான நேர்முகத் தேர்வு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளது.

இதற்கமைய, அதிகாரிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

குறிப்பாக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரிகள் பெரும்பாலும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...