tamilni 411 scaled
இலங்கைசெய்திகள்

நடுவானில் ரணிலுடன் செல்பி எடுத்த பிள்ளையான்!!

Share

நடுவானில் ரணிலுடன் செல்பி எடுத்த பிள்ளையான்!!

உலங்குவாணூர்தி பயணத்தின் போது ரணிலும் பிள்ளையானும் நடுவானில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு காட்சி அதிகம் பேசும் என்பதற்கு இணங்க, பிள்ளையானும் ரணிலும் காட்சிதருகின்ற இந்தப் புகைப்படம் அதிகம் பேசப்படுகின்றது சமூக ஊடகங்களில்.

இந்தப் புகைப்படம் தொடர்பாக மக்கள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்று பார்ப்பதற்கு முன்பாக இந்தப் புகைப்படத்தில் என்ன தெரிகின்றது என்று பார்ப்பது அவசியம்.

இந்தப் புகைப்படத்தை பிள்ளையான்தான் ‘செல்பி’எடுத்தது போன்று தெரிகின்றது.
புகைப்பம் எடுக்கப்பட்டது ரணிலுக்கு தெரியவில்லை போன்றும் தெரிகின்றது.
இந்தப் புகைப்படம் பிள்ளையானினாலேயே எடுக்கப்பட்டிருந்தால், அதனை பிள்ளையான்தான் வெளியிட்டும் இருக்கவேண்டும்.

பிரபலம் ஒன்றுடன் செல்பி எடுத்து வெளியிடும் ஆர்வக்கோளாற்று பேர்வளி அல்ல பிள்ளையான். பிள்ளையான் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது உண்மையானால் அதற்கு நிச்சயம் ஒரு அரசியல் காரணம் இருக்கவேண்டும்.
அந்த அரசியல் காரணம் என்ன?

பிள்ளையான் மகிந்த குடும்பத்தின் செல்லப்பிள்ளை என்ற ரீதியிலும், கடந்த தடவை பிள்ளையானை ரணிலே சிறைக்கு அனுப்பியவர் என்கின்ற பின்னணியிலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டு பிள்ளையான் மீது தற்பொழுதும் இருக்கின்றது என்கின்ற குறிப்போடும், இந்தப் புகைப்படத்தில் ஒரு அரசியலைத் தேடவேண்டி இருக்கின்றது.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...