tamilnih 14 scaled
இலங்கைசெய்திகள்

பல மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

Share

பல மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட பல மாதங்களின் பின்னர் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 309.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 230.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 220.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 395.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...