Mahinda Ranil 2 1 7 scaled
இலங்கைசெய்திகள்

இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

Share

இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

இந்திய முகாமையாளர்களான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ் ஆகிய இருவருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய பிரஜைகள், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இலங்கை தேர்வுக் குழு தலைவருமான உபுல் தரங்க மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நீல் புரூம் ஆகியோரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உபுல் தரங்க மற்றும் நீல் புரூம் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கும் அறிவித்துள்ளனர்.

இதன்பின்னரே இந்திய முகாமையாளர்கள் இருவருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...