tamilnaadi 101 scaled
இந்தியாசெய்திகள்

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

Share

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுப் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அதேபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததால், அதிரடி சோதனை நடத்தப்பட்டபோது பசாய் தாராப்பூர் பகுதியில், கிடங்கு ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்கள் போதைப்பொருளை சத்துமாவில் கலந்து கடத்த முயன்றுள்ளனர். உடனே அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், ஜாபர் சாதிக் திரையுலக பிரமுகர்கள், பிரபல நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...