2 2 scaled
இலங்கைசெய்திகள்

சாந்தனை இந்தியாவிற்கு அனுப்பிய பொட்டம்மான்! தாயாருக்கு கூறிய ரகசியம்

Share

சாந்தனை இந்தியாவிற்கு அனுப்பிய பொட்டம்மான்! தாயாருக்கு கூறிய ரகசியம்

“நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும். அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன் அப்பாவை புலனாய்வுத்துறையின் வாகனங்களுக்குரிய பொறுப்பாளராகவும் பொட்டம்மான் நியமித்தார் என மறைந்த சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்.

சாந்தனின் சகோதரான மதிசுதா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, இலங்கை, இந்திய இராணுவத்தின் மிக நெருக்கடியான காலத்திலும் அத்தனை போராளிகளுக்கும் உணவு தயாரிப்பதுடன் மறைமுக அரணாக இருந்த எமது இல்லத்தை கல்வீடாக மாற்றுவதற்கு சீமேந்து பைகள் அளித்ததுடன் அதில் குடியமர்த்தி வைப்பதில் பொட்டம்மான் பெரும் பங்காற்றினார்.

பிற்காலத்தில் மல்லாவி வரும்போதெல்லாம் அம்மாவிடம் ஒரு பிடியாவது வாங்கி உண்டு செல்லும் பொட்டம்மான் மேற்குறிப்பிட்ட உண்மையை கூறினார்.

சாந்தனை காவல்துறையினர் தூக்கத்தில் வைத்து கைது செய்தபோது அவர் சயனைட் (நஞ்சு) உட்கொள்ள முற்பட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிவராசண்ணாவின் பணத்தை கையாண்டதைத் தவிர வேறு எந்த விடயத்திலும் எனது அண்ணா சாந்தன் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) தொடர்புபடவில்லை.

சாந்தன் என்பவரின் குற்றச்சாட்டுக்களை தில்லையம்பலம் சுதேந்திரராஜா மேல் போட்டேன் என விசாரணை அதிகாரியே பகிரங்கமாக கூறி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

மறைக்கப்படும் மற்றும் திரிபுபடுத்தப்படும் வரலாறுகளை, மற்றவர்களுக்கு பாதிப்பற்ற வகையில் சொல்ல வேண்டிய கடமையானது குடும்ப உறுப்பினரான எனக்கு என்றும் உண்டு.

இத்தகவல்கள் அவரிடம் நேரடியாகவும், பொட்டு அம்மான் மூலமாகவும், அவரது சக போராளிகளூடாகவும் பெறப்பட்டதுடன் நான் குறிப்பிடுபவை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவை மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...