tamilni 68 scaled
இலங்கைசெய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்

Share

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்

கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரின் மகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், ஆளுநரின் மகனைக் கைது செய்வதற்காக யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேகநபரின் சொகுசு ஜீப் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலுக்கு உள்ளான அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்ட 34 வயதுடைய பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து சந்தேகநபருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் கதிர்காமம் பகுதிக்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விடுதியை சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை பொலிஸ் காவலில் எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில், சந்தேகநபருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...