முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
தியாக தீபம் திலீபனுடைய 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ரவிகரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த தடையுத்தரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இன்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் வீட்டுக்கு நேரில் சென்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸார் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 Comment