tamilni 60 scaled
உலகம்செய்திகள்

66 மூட்டைகளில், 38,000 உணவு பொட்டலங்கள்! காசா மக்களுக்கு உதவிக்கரம்

Share

66 மூட்டைகளில், 38,000 உணவு பொட்டலங்கள்! காசா மக்களுக்கு உதவிக்கரம்

பசியால் வாடும் பெரும்பாலான காசா மக்களுக்கு, அமெரிக்க ராணுவம் தனது முதல் வான்வழி உதவியை செய்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில், தெற்கு பகுதியில் இருந்து வரும் சிறிய உதவியை தவிர, காசாவிற்குள் வரும் உணவு, தண்ணீர், மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் நுழைவை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது.

இதற்கு முன்னதாக, அத்தியாவசிய பொருட்களுடன் தினசரி காசாவிற்குள் நுழையும் 500 விநியோக டிரக்குகளின் உதவியை காசா மக்கள் நம்பியிருந்தனர் என்று UN பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் UNRWA தெரிவித்துள்ளது.

66 மூட்டைகளில், 38,000 உணவு பொட்டலங்கள்! காசா மக்களுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

காசாவில் பட்டினியால் பாதிக்கும் மேற்பட்டோர் அவதி அடைந்து வரும் இந்த நிலையில், அமெரிக்கா ராணுவம் தனது முதல் வான்வழி உதவியை வழங்கியுள்ளது.

ராயல் ஜோர்டானிய விமானப்படையுடன் (Royal Jordanian Air Force) இணைந்த கூட்டு முயற்சியில், C-130 ஹெர்குலஸ்(C-130 Hercules) போக்குவரத்து விமானங்களைப் பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் காசா மக்களுக்கான உதவியை செய்துள்ளது.

வான்வழி மார்க்கமாக செய்யப்பட்ட இந்த உதவியில், சுமார் 38,000 க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய 66 மூட்டைகளை அமெரிக்க ராணுவம் காசாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் இறக்கியுள்ளது.

வான்வழி உதவியை தொடருவதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வதற்கான திட்டமிடல் நடந்து வருவதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....

image f4517ddf89 1
செய்திகள்இலங்கை

‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமையில் இருந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர்...

sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...