லால் சலாம் தோல்விக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் படம்!! யார் ஹீரோ தெரியுமா?
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார்.
பிரமாண்டமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். அதுவும் ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் இப்படம் படு தோல்வியை சந்தித்தாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் சித்தார்த் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
Comments are closed.