வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கோமராசி மீன் சிக்கியுள்ளது.
கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டி ஒருவரின் வலையில் இந்த கோமராசி மீன் சிக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்து வந்துள்ளனர்.
கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் மீனை வலையில் இருந்து அகற்றி மீண்டும் மீனவர்களால் கடலினுள் விடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள் சில நாள்களாக கரைக்கு வந்து போகின்றன என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a comment