உள்நாட்டு பொறிமுறையை ஒரு போதும் நாம் ஏற்கத் தயாரில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (24) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கை அரசுடன் பேசுவதாக இருந்தால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் பேச வேண்டும் எனவும் இலங்கை அரசை ஒருபோதும் நம்பத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்..
இலங்கை அரசுடன் பேசச் செல்வதென்பது தற்கொலைக்கு சமம் எனவும் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Leave a comment