tamilni 78 scaled
சினிமாபொழுதுபோக்கு

திடீரென காணாமல் போன பிரபல நடிகர்கள் … எல்லா நடிகர்களையும் கடத்திட்டு போய்ட்டாங்க

Share

திடீரென காணாமல் போன பிரபல நடிகர்கள் … எல்லா நடிகர்களையும் கடத்திட்டு போய்ட்டாங்க

சுமார் 45 ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ,நடிகர் என பெயர் பெற்றவர் கே . பாக்யராஜ் .

சினிமாவில் ஏராளமான காதல் கதைகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்த பாக்யராஜ்,இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் முகம் காட்டியவர் .

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, “ இந்திய சினிமா நடிகர்களை கடத்தி சென்று விட்டனர், என்றும் அதன்பின்னர் நடந்த சம்பவம் குறித்தும் கருத்து வெளியிட்டார், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“எல்லா நடிகர்களுக்கும் டூப் கொடுத்தார்கள் . நாட்டில் எங்கயோ மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் தமிழ் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. அந்த கிராமத்தில் நிறைய விழாக்கள் , தமிழ் பண்டிகைகள் வரும் போது ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று யோசித்தார்கள், அவர்களின் வசதிக்கு நடிகர்களை அங்கு அழைக்க முடியாது, அதனால் அப்போது நடிகர்கள் எல்லோருக்கும் டூப் இருப்பார்கள் அவர்களை கூப்பிட்டால் மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து நிகழ்வுக்கு டூப் நடிகர்களை அழைத்தார்கள் .

ஆனால் நிகழ்வு ஒழுங்கமைப்பில் ஒரு தவறை விட்டுவிட்டார்கள், அதாவது எல்லா நடிகர்களும் உண்மையாவே வருகிறார்கள் என்ற அறிவித்தல் ஒன்றை கொடுத்து விட்டார்கள் .

இந்தவிடயத்தை அங்குள்ள நபர் ஒருவர் தீவிரவாதிக்கு அறிவித்துவிட்டார்.

தமிழ் நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் , உலகநாயகன் , தளபதி எல்லோரும் வருகிறார்கள் . அந்தக் குழுவை அப்படியே கடத்தினால் நாங்க எவ்வளவு காசு கேட்டாலும் கிடைக்கும் , என கூறிவிட்டான்.

பின்னர் அந்த நடிகர் குழுவை அப்பிடியே அள்ளி கொண்டு போய் விட்டார்கள் . நடிகர்களுக்கு தங்களை கடத்தி கொண்டு வந்தது கூட தெரியாது .

நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லும் போது தான் , எங்களை கடத்தி கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று நடிகர்கள் அறிந்து கொண்டனர் . இது ஒரு கதை, இப்பிடி பேசும் போது எனக்கு நிறையை இவ்வாறான ஞாபகங்கள் வருகிறது . ” என இந்த ஒரு காமெடியான ரகசியத்தை கூறி அரங்கை சிரிப்புக்குட்படுத்தினார்.

Share
தொடர்புடையது
Vishal
சினிமாபொழுதுபோக்கு

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!

லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு...

mandaadi soori
பொழுதுபோக்குசினிமா

75 கோடி பட்ஜெட்; படகுப் பந்தயக் களம்: சூரியின் மண்டாடி படப்பிடிப்புத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி....

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...