2 1 1 scaled
சினிமாசெய்திகள்

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. TVK தலைவர் விஜய் அறிக்கை

Share

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. TVK தலைவர் விஜய் அறிக்கை

தன்னுடைய அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அரசியல் பயணத்தை பிப்ரவரி 2ம் திகதி தொடங்கினார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கட்சி சார்பில் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள், நடிகைகள் என போன்ற பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர,சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடன் பணிவான வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1000315221
பொழுதுபோக்குசினிமா

நடிகை பிரியாமணியின் சம்பளம் குறித்த கருத்து

நடிகை பிரியாமணி, நடிகர் கார்த்தியின் முதல் படமான ‘பருத்திவீரன்’ மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர்....

25 68fdb20360410
சினிமாபொழுதுபோக்கு

நடிகை அமலா பாலின் 34வது பிறந்தநாள் மற்றும் சொத்து மதிப்பு விவரம்

தென்னிந்திய நடிகைகளில் திறமையானவராகக் கருதப்படும் நடிகை அமலா பால் இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்....

25 68e32fead079f
சினிமாபொழுதுபோக்கு

காந்தாரா அத்தியாயம் 1′ திரைப்படம் இந்த ஆண்டு மாபெரும் வசூல் சாதனை

இந்த ஆண்டு இந்திய சினிமாவிலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள படம் காந்தாரா சாப்டர் 1....

25 68fde7b6a965a
செய்திகள்இலங்கை

இலங்கை மத்திய வங்கி கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் மீது கணக்கெடுப்பு மற்றும் பதிவு கட்டாயம்

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக ஒரு கணக்கெடுப்பை...