tamilni 65 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு அறிவித்தல்

Share

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு அறிவித்தல்

கொழும்பின் சில வீதிகள் இன்று முதல் மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில வீதிகள் இன்று (05.2.2024) முதல் 03 கட்டங்களாக மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து தடை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் தொடருந்து கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி 20 முதல் மார்ச் 04 வரையிலும் மூடப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை வழியாக ரொட்டுண்டாகார்டன் சந்தி வரையான பகுதி மார்ச் 05 முதல் 11 வரை மூன்றாம் கட்டமாக மூடப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி குழாய்கள் பதிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாலேயே குறித்த வீதிகள் முடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....