tamilnih 101 scaled
இலங்கைசெய்திகள்

மாவனல்லையில் தீ விபத்து:சுமார் 30 வர்த்தக நிலையங்கள் சேதம்

Share

மாவனல்லையில் தீ விபத்து:சுமார் 30 வர்த்தக நிலையங்கள் சேதம்

மாவனல்லை நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு(28.01.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவனல்லை நகரின் பிரதான வீதியில் அமைந்திருந்த சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன.

தீப் பரவலை தடுக்க பிரதேசவாசிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஒருகட்டத்தில் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

எனினும் தீவிபத்தின் வீரியம் காரணமாக சுமார் 30 வரையான கடைகள் வரை தீ பரவி சேதம் ஏற்பட்டிருந்தது.

கடையொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மாவனல்லை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...