திலீபன் 1 scaled
இலங்கைசெய்திகள்

திலீபன் நினைவுத்தூபியில் பொலிஸ் குவிப்பு!

Share

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்துக்கு அமைய நீதிமன்ற உத்தரவின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்தில் இருந்து பணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய யாழ்.தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவஞ்சலி நிகழ்வு கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...