fdf scaled
செய்திகள்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை

Share

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை

கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும்.

கொரோனாத் தொற்றுப் பரவல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இவ்வாறான சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடாக அபிவிருத்திகளுக்கு நிதி மற்றும் கடன் சலுகை போன்ற மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது.

இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஆற்றிய உரையின் வடிவம் வருமாறு,

தலைவர் அவர்களே, நீங்கள் இலங்கையின் நீண்டகால நண்பராக இருக்கிறீர்கள். எதிர்வரும் காலங்களிலும், உங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கொரோனாத் தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது.

ஆபத்துமிக்க புதிய வைரஸ் திரிபுகள் பரவலடைவதைத் தடுப்பதற்கான தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்ளல் போன்றவை தொடர்பில் காணப்படும் சவால்களை உடன் வெற்றிகொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அடையாளம் காணப்படல் வேண்டும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில், இலங்கை வெற்றிகண்டுள்ளது.

தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது.

நாட்டைப் பூட்டுவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்லுயிர்ப் பரம்பல் இல்லாமல் போவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தீர்க்கமானதும் உடனடியானதுமான பலதரப்பு நடவடிக்கையொன்றின் தேவை அவசியமாகியுள்ளது.

எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் போதும், சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை இலங்கை அன்புடன் வரவேற்கிறது.

2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், அதாவது 2009ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது.

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்று, இந்த மாபெரும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 11 2
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை விஹாரை கட்டுமானம்: ற்போதைய நிலையைத் தொடர நீதவான் உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடத்தின் தற்போதைய...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...