tamilnih 74 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்

Share

இலங்கையிலிருந்து அபுதாபிக்கு தொழிலுக்காக சென்ற இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி – பத்தேகம, கோனாபினுவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் குறித்த இளைஞன் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், இவர் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தினமும் தொலைபேசி அழைப்பெடுத்து தொடர்பை பேணி வந்துள்ளதுடன், கடந்த 6 ஆம் திகதி முதல் அவரது தொடர்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.

இது தொடர்பில் குடும்ப உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (16) குறித்த இளைஞன் தொழில் புரிந்த இடத்திற்கு தொடர்புகொண்டு கேட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக அந்நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனுக்கு எவ்வித நோய்களும் இல்லை என்றும் அவர் தொழில்புரியும் நிறுவனத்தில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு அந்நாட்டு அரசிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...