tamilni 452 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவில் வியக்க வைக்கும் கிறிஸ்மஸ் தாத்தா மணற்சிற்பம்

Share

இந்தியாவில் வியக்க வைக்கும் கிறிஸ்மஸ் தாத்தா மணற்சிற்பம்

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இந்தியாவின் – ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்மஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மணற் சிற்பம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் முக்கிய நிகழ்வுகளின் போது ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதற்கமைய நேற்று (25.12.2023) கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

குறித்த மணற்சிற்பம் 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

மேலும், இந்த சிற்பத்தின் மூலம் ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்’ என்ற செய்தியை உலகிற்கு உணர்த்துவதாக சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...