tamilni 414 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்

Share

அமெரிக்க இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோயில் சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக நெவார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

“கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க நெவார்க் பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்,”என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் “X”தளத்தில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...