tamilni 331 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு

Share

கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள இரவு விடுதியில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அத்துடன், குடிபோதையில் இருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் விடுதிக்கு வந்த இரண்டு பெண்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஈடுபட்ட பெண் ஒருவர் கடந்த 17ஆம் திகதி இரவு விடுதிக்கு வந்து மது அருந்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரவு விடுதிக்கு வேகன் ஆர் மற்றும் கெப் வண்டியில் குழுவினர் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் விடுதியை விட்டு வெளியேறும் போது, ​​அவர்கள் 4 முறை மேல்நோக்கிச் சுட்டனர், பின்னர் அவர்கள் வந்த வாகனங்களுக்கு அருகில் சென்று வானத்தை நோக்கி மேலும் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பயமுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....