இலங்கை
யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் காலாவதியான குளிர்பானங்கள்
காலாவதியான குளிர்பானங்கள்!
யாழிற்கு முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், பலவேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
அந்த வகையில், யாழ்.உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அந்த குளிர்பான போத்தல்களை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் தான் காலாவதியான பொருட்களை வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கூறப்படும் நிலையில் , தற்போது முன்னாள் ஐனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வுக்கு வாங்கிய குளிர்பானமும் காலாவதியாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
You must be logged in to post a comment Login