tamilni 232 scaled
இலங்கைசெய்திகள்

மூன்று நாட்களில் 14 பேர் மாயம்

Share

மூன்று நாட்களில் 14 பேர் மாயம்

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து கடந்த மூன்று நாட்களில் 5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல்போயுள்ளதுடன் அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன், பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஆகியோர் காணாமல் போன சிறார்களில் அடங்குகின்றனர்.

காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவிலைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியும், எடரமுல்லையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், அநுராதபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் அடங்குகின்றனர்.

அதேவேளை, மொரட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணும், பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கூலித்தொழிலாளியும், கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆணும், புத்தளத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணும் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நோர்வூட் பிரதேசத்தில் காணாமல்போன வயோதிபப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பட மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 80 வயதான முத்து வீரம்மன் என்பவரே தோட்டத்தின் கால்வாய் என்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...