tamilni 208 scaled
இலங்கைசெய்திகள்

சஜித்துடனான சந்திப்பில் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அடையாள மாற்றம் குறித்து கோரிக்கை

Share

சஜித்துடனான சந்திப்பில் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அடையாள மாற்றம் குறித்து கோரிக்கை

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியின் பங்காளிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு (12.12.2023) எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இதில், பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, ஏரான் விக்ரமரட்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், திகாம்பரம், உதயகுமார், வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தௌபிக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, உலகத் தமிழர் பேரவையினால் இமயமலை பிரகடனம் கையளிக்கப்பட்டதோடு, அதனை செயற்பாட்டு ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவரது தலைமையிலான எதிரணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில், அவருடனான உரையாடலின்போது, இமயமலை பிரகடனத்தை நான்கு பீடாதிபதிகளுக்கும் கையளித்து அவர்களிடமிருந்து ஆதரவினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டமையானது முக்கியமானதொரு விடயம்.

அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை.

அதேநேரம், ஒரு சில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.

இதேநேரம், எதிர்க்கட்சித் தலைவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளது.

அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

அச்சமயத்தில், புலம்பெயர் இலங்கையர் என்றோ அல்லது உள்நாட்டில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கோ நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு நீண்ட பயணம் அவசியமாக உள்ளது.

அந்தப் பயணத்தின் முதல் கட்டமாகவே இமயமலை பிரகடனம் காணப்படுகிறது என்ற விடயத்தினை சுட்டிக் காண்பித்தோம் என்றார்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சந்தித்ததோடு அமரபுர நிக்காயவைச் சேந்த வல்பொல விமலஞான தேரர், மாகல்லே நாகித மகா தேரர் பேராசிரியர் கந்தேகொட விமலதம்மே மகா தேரர், வாஸ்கடுவ மஹிந்த வம்ச மகா தேரர், பள்ளிகந்தே இரத்தினசார மகா தேரர், நிந்தனே சந்தவிமல மகா தேரர் ஆகியோரையும் சந்தித்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...